சுவையான சுவைகள் - தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்

"இருட்டு வீட்ல கூட,சோறு போட்டு வச்சா,சோறு எடுத்த கை நேரா வாய்க்குத் தான் போகும்.எங்கிட்ட தெரிஞ்சு சாப்பிடுன்னு சொல்றியே!"
அது எனக்கும் தெரியும் சார்.நான் சொல்ல வந்தது,நாம கொஞ்சம் வெளி உலக விஷயங்களைத் தெரிந்துகொண்டு சாப்பிடலாம் என்பதே.

முதலாவதாக,உங்கள் முன்பு இரண்டு சம அளவு கொண்ட குப்பிகள் (small dispensers/shakers) வைக்கப்பட்டுள்ளது.அதன் நிறம் கூட ஒன்றுதான்.அதில், எதில் உப்பு இருக்கிறது? எதில் மிளகுப்பொடி இருக்கிறது? என்பதை எப்படி பார்த்தவுடன்  கண்டுபிடிப்பீர்கள்? (அதைத் திறக்கவோ உள்ளே என்ன இருக்கிறது என உலுக்கியோ பார்க்கக் கூடாது). வங்கித் தேர்வு கேள்விபோல சிலருக்குத் தோன்றலாம்.இது ஒருவகை பொது அறிவுக்கு கேள்வியும் கூட.
எந்தக் குப்பியில் துளைகள் குறைவாக இருக்கின்றதோ அது - உப்பு.
எதில் துளைகள் அதிகமாக இருக்கிறதோ அது மிளகு. ( சில ஐரோப்பிய உணவகங்கள், மிளகின் விலை கருதி,இதை மாற்றி, குறைவான துளைகள் போட்டு வைத்திருப்பார்கள் - ஆதாரம்)

அடுத்ததாக, உணவு பரிமாறப்பட்ட பின்பு,உங்கள் கைகள் பற்றுக்கரண்டி (Spoon) அல்லது முற்கரண்டியைத்(Fork ) தேடும்.எல்லா உணவகங்களிலும் உங்கள் வலதுபுறம் Spoon மற்றும் Knife வைத்திருப்பார்கள்.இடதுபுறம் Fork இருக்கும்.இதிலிருந்தே,இவற்றை எந்தக் கைகளில் உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். கத்தி,கரண்டி இவற்றை வலது கையாலும் ,முள்கரண்டியை இடது கையாலும் பிடிக்க வேண்டும்!

இதை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு குறிப்பு.
Left (4 எழுத்து) - Fork (4 எழுத்து)
Right (5 எழுத்து) - Knife , Spoon (5 எழுத்து)

மேலும் சில குறிப்புகள் கீழ் உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன.

இறுதியாக,ஒவ்வொரு உணவகங்களும் உணவுவிலைப் பட்டியல் (Menu Card  ) வைத்திருப்பார்கள்.(சில உயர்தர நட்சத்திர ஹோட்டல்களில் விலைகள் குறிக்கப்பட்டிருக்காது.).வெறுமனே போனவுடன் பக்கத்து மேசையில் உள்ள உணவை ஆர்டர் செய்யாமல், பட்டியலைக் கேட்டு பிறகு தேர்வு செய்யவும்.விலையில் ஏதேனும் கேள்விகள் அல்லது உணவின் பெயர் விளக்கம் எது வேண்டுமானாலும் கேளுங்கள். நிச்சயம், தினசரி சிறப்பு உணவுப் பட்டியல் (Today  Special ) அங்கு எழுதி வைத்திருப்பார்கள்.அப்படி இல்லை என்றால் கூட, உணவு பரிமாறுபவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படிப் பழக்கப்படுத்திக்கொள்வதால்,நிறைய புது உணவுகளைப்  பற்றித்  தெரிந்துகொள்ளவும்,ருசிக்கவும் முடியும்.வாய் உள்ள பிள்ளை தானே பிழைக்கும் :)

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- ராஜ்குமார்
04-12-18

Comments