சுவையான சுவைகள் - ஏன் இந்தப் பெயர்?

"நாங்க நேத்து ஒரு ரெஸ்டாரண்ட் ல தங்கினோம்.நல்லா சாப்பிட்டு காலைல தான் வந்தோம்" "எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்கு, லாட்ஜ் கூட இருக்கு. அதே தெரு முனையில பாட்டியம்மா மெஸ் ஒன்னு இருக்கு.எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.."

இப்படியான உரையாடல்களை நம் அன்றாட வாழ்வில் கேட்கிறோம்.நாம் கூட சொல்லி இருக்கிறோம்.நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும், மெஸ்,ஹோட்டல்,ரெஸ்டாரண்ட் மற்றும் லாட்ஜ் இவைகளுக்கு வேறுபாடு என்ன என்று? பேர் ல என்ன இருக்கு.எல்லாம் நியூமராலஜி :) ஒருத்தர் போன வாரம் "முருகா ஹோட்டல்" னு ஒரு சின்னதா சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சார்.ஓட்டம் சரி இல்ல.இன்னைக்கு காலைல பார்த்தேன் ,"முருகையா மெஸ்" னு போர்டு வச்சிருக்காரு.இதெல்லாம் பிரச்சினையா? என்று கேட்பவர்களும் உண்டு.அதுக்காக அப்படியே விடவா,ஒரு பிளாக் ஆரம்பிச்சு வாராவாரம் போஸ்ட் போடறோம்? கடமை னு ஒன்னு இருக்குதில்ல. நேரா, விஷயத்துக்குப் போய்டலாம்.

 ஹோட்டல் - தங்கும் விடுதி.பெரும்பாலும் உணவகத்தைக் கொண்டிருக்காது.லாட்ஜ் (Lodging ) என்பதுவும் இதுபோன்றே.சில ஹோட்டல்கள் "அறை சேவை" (Room service) என்ற பெயரில்,காலை உணவை மட்டும் தயார் செய்து அல்லது வாங்கி , தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது சிறு தொகையிலோ தருகின்றனர் .

ரெஸ்டாரண்ட்- உணவுக்காக மட்டுமே திறந்து வைக்கப்படுபவை.தங்கும் வசதிகள் நிச்சயம் இருக்காது.அனைத்து ரெஸ்டாரண்ட்-களும், குடிக்கும் நீர் மற்றும் கழிப்பறை உபயோகத்திற்கு , எவ்வித கட்டணமும் பெறக்கூடாது என்பது சட்டமாகும்.(not package water ).

மெஸ் - சிறிய அளவிலான ரெஸ்டாரண்ட், மெஸ் அல்லது தட்டுக்கடை என்ற பெயரில் வழங்கப்படுகின்றது.Mess - என்பதன் நேரடி விளக்கம் என்ன என்று ஆங்கில அகராதியில் தேடினால், "குழப்பமான சூழல்" என்று பொருள் கிடைத்தது.ஆனால், லத்தின் அகராதியில் இதற்கான விளக்கம் கிடைத்தது."உணவின் ஒரு பகுதி" என்பது இதன் பொருள்."மேசை மீது பரிமாறப்பட்ட சிறு உணவு" என்றும் பொருள்படும்.ஆக,இதையே விளக்கம் என்று ஏற்றுக்கொள்ளலாம். குறிப்பு: மதுரை அம்மா மெஸ் ரெஸ்டாரண்ட் என்று ஒரு கடை கூட இருக்கிறது.இது Mess இல்லை :))

ஓரளவு அல்லது முழுமையாக விளக்கம் கிடைத்ததா? பெயர்கள் பற்றி வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால்,என்னிடம் கேட்கலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்!

- ராஜ்குமார்

Comments