NV-02# நாட்டுக்கோழி கார வறுவல்

பிராய்லர் எனப்படும் கறிக்கோழி (இறைச்சிக்காக மட்டும் வளர்க்கப்படுபவை) பற்றி பல்வேறு உண்மைகளும் வதந்திகளும் சரிசமமாக உதவுவதால், நாம் நாட்டுக்கோழியை வைத்து இந்த வறுவலை சமைக்கப் போகிறோம்.'

Tips:
நாட்டுக்கோழி என்ற பெயரில் கூட சில கலப்பு இனங்கள் இருக்கும்.அதனால் நன்கு தெரிந்த கடைக்காரரிடம் மட்டும் வாங்கவும் .

தேவை:
நாட்டுக்கோழி - 1/2 கிலோ
கரம் மசாலா - 3 தேக்கரண்டி  ( தயாரிப்பு முறைக்கு இங்கு சொடுக்கவும்)
பெரிய வெங்காயம்-2 ( தனியாக அரைத்துக்கொள்ளவும்)
எலுமிச்சைச் சாறு-1 தேக்கரண்டி
உப்பு-2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒருபிடி நறுக்கியது.
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

செய்வோமா

  • ஒரு பாத்திரத்தில்,மேல்குறிப்பிட்ட அனைத்தையும் சிறிது எண்ணெய் விட்டு கலக்கிக்கொள்ளவும்.
 
  • அதனுடன் கோழிக்கறியைச் சேர்த்து,நன்றாக கலக்கவும்.பிறகு நன்கு மூடி அரைமணிநேரம் குளிப்பதனப்பெட்டியில் வைக்கவும்.
     
     
     
     
     
     
     
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலா சேர்த்த கோழியைச் சேர்க்கவும்.
  • கறி நன்கு வதங்கியவுடன், கறி  மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்வரை,நன்கு வேகவிட்ட பிறகு அடுப்பை அணைக்கவும்.
  • நாட்டுக்கோழி கார வறுவல் தயார்.

Comments