NV-01# சிறப்பு ஆம்லெட் ( I am late >> Omelette)

எல்லாமே முட்டையிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன.நாமும் ஒரு சுவையான முட்டை ரெசிபியிலிருந்து நமது பயணத்தைக் துவங்கலாம்!

Tips:
முட்டையை தண்ணீரில் போட்ட உடனே முழுவதும்  மூழ்கினால் மட்டுமே அது நல்ல முட்டை.

தேவை:
முட்டை - 3
தக்காளி-1
நறுக்கிய மல்லி இழை - கொஞ்சம் 
சீரகம்,மிளகு - 1 தேக்கரண்டி 
வெண்ணெய் - 1 தேக்கரண்டி 
ரொட்டித்துகள் - 2 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப 
1
செய்வோமா..
முட்டையை உடைத்து,அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி,மல்லி இழை ,உப்பு,ரொட்டித்துகள்கள்,பொடித்த மிளகு சீரகம்,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.பிறகு அப்படியே தோசைக்கல்லில் ஊற்றி , குறைந்த சூட்டில் 5நிமிடம் இருபுறமும் வேகவைத்து எடுத்தால், சிறப்பு ஆம்லெட் தயார்!

 பிடிக்கும் என்றால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கொள்க..

Comments